Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு அரியவகை நோய் பாதிப்பு…. காப்பாற்றும் ஊசியின் விலை 16 கோடி…. பரிதவித்து நிற்கும் ஏழை பெற்றோர்…!!

கோவை மாவட்டம் போத்தனூர் அம்மன் நகர் மூன்றாவது வீதியில் வசிக்கும் தம்பதிகள் அப்துல்லா -ஆயிஷா. அப்துல்லா வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு எட்டு மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இந்த குழந்தைக்கு எஸ்.எம்.ஏ எனப்படும் அரிய வகை மரபணு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு குழந்தைக்கு சிகிச்சை செய்துள்ளனர். அப்போது குழந்தைக்கு அரிய வகை மரபணு நோய் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதன் காரணமாக குழந்தை 1 வருடம் மட்டுமே உயிருடன் இருக்கும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். அப்படி குழந்தையை காப்பாற்ற வேண்டுமானால் குழந்தைக்கு மரபணு ஊசி செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

ஆனால் அந்த மரபணு ஊசியானது அமெரிக்காவில் மட்டுமே கிடைக்கும். மேலும் அந்த ஊசியின் விலை 16 கோடி ரூபாய் என்று மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அப்துல்லா ஆயிஷா தம்பதிகள் தங்களுடைய குழந்தைக்கு, தேசிய மற்றும் மாநில அரசுகள் நிதி உதவி வழங்கி 16 கோடி ரூபாயில் உள்ள அந்த ஊசியை வாங்கி கொடுத்து குழந்தையின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். 16 கோடி ரூபாய் கொடுக்க முடியாத நிலையில் குழந்தையாயி எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் அவர்கள் தவித்து வருகின்றனர்.

இதில் வேதனையளிக்கும் விஷயம் என்னவென்றால் அவர்களுடைய முதல் குழந்தையும் இதே பாதிப்பால் உயிரிழந்த நிலையில் இரண்டாவது குழந்தையையாவது காப்பாற்ற வேண்டும் என்று அந்த தம்பதிகள் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். குழந்தையை காப்பாற்ற வழி இருந்தும் அதற்கான விலை அதிகமாக இருப்பதால் வறுமையின் காரணமாக வாங்க முடியாமல் தவிக்கும் அந்த தம்பதிகள் பரிதவித்து நிற்பதைப் பார்த்தால் காண்போர் நெஞ்சை கணக்க வைத்துள்ளது.

Categories

Tech |