Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் சொல்கின்றேன்….. ”பாஜக இந்து கட்சி தான்”…. எனக்கு உரிமை இருக்கு… பரபரப்பை கிளப்பிய பிரபலம் …!!

அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லா கட்சிகளும் நேரடியாக சென்று இஸ்லாமிய மக்களுக்கு சலுகைகளை வாரி வாரி வழங்குகிறார். இந்துக்களுடைய குரலை கூட கேட்கவில்லை. எனவே இந்த முறை நாங்கள் அங்கீகாரத்தை கேட்கின்றோம்,  எனக்கு உரிமை இருக்கின்றது. பிஜேபியுடமும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திடமும் கேட்க எங்களுக்கு வந்து உரிமை இருக்கிறது, அவர்களுக்கும் கடமை இருக்கிறது இந்துக்களின் குரலை கேட்க வேண்டும்.

அதிமுக பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டணி அமைத்து இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி என்பது ஒரு இந்து கட்சி  தான் என தெரிவித்தார். மேலும் குஷ்பு பாஜக ஹிந்து கட்சி இல்லை என்று சொல்கிறாரே என கேள்வி எழுப்பப்பட்டதற்கு, குஷ்பு சொல்லுறது கருத்தா ? இல்ல அர்ஜுன் சம்பத் சொல்லுறது கருத்தா ? அர்ஜுனன் சம்பத் சொல்றதுதான் கருத்து. முருகன் சொல்லுறது தான் கருத்து, அத்வானி வாஜ்பாய் சொல்றதுதான் கருத்து,  மோடி சொல்வதுதான் கருத்து.

ராகுல் காந்தி ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரத்தை கொண்டு வருவது தான் பாரதிய ஜனதாவின் நோக்கம் என குற்றம் சாட்டுவது தொடர்பான கேள்விக்கு,  அது உண்மை தான்.  எங்களுடைய நாடு ஒரே நாடு தான். எங்க நாடு இமயமலை முதல் ஈழம் வரை எங்க நாடு இந்து நாடு தான். இந்தியா ஒரே நாடு அதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கிறதா ?  ராகுல் அப்படித்தான் சொல்லுவாறு, காங்கிரசில் படித்தவர் தானே.

இந்து இயக்ககளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருக்கின்றது. சென்னையில முதல்கட்ட  பேச்சுவார்த்தை  நடந்து இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் அனைத்து ஒருங்கிணைப்பு பணிகளும் சிறப்பாக நடக்கும். ரஜினியோட நிலை அரசியலுக்கு வரலை என்று சொல்லிவிட்டார்கள். தமிழ்நாட்டில் இந்துத்துவ சக்திகள் வெற்றி பெற வேண்டும், அதுதான் எங்க வேலை என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.

Categories

Tech |