Categories
தேசிய செய்திகள்

“அவ லவ் பண்ணுனது பிடிக்கல” அறையில் கிடந்த உடல்…. கையில் தலையோடு ரோட்டில்…. தந்தையின் கொடூர செயல்…!!

தந்தை ஒருவர் தன்னுடைய மகளின் தலையை வெட்டி கையில் வைத்து கொண்டு ரோட்டில் நடந்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பாண்டேதாரா என்ற கிராமத்தில் வசிப்பவர் சர்வேஷ்குமார். இவருடைய மகள் ஒருவரை காதலித்து வந்துள்ளார். மகளின் இந்த காதல் விவகாரம் சுரேஷ்குமாருக்கு தெரியவந்ததையடுத்து தன்னுடைய மகளை கண்டித்துள்ளார். ஆனால் அவர் கேட்காததால் கோபமடைந்த சர்வேஷ்குமார் தன்னுடைய மகளின் தலையை துண்டித்து கொலை செய்துள்ளார். மேலும் தலையை கையோடு எடுத்துக் கொண்டு சர்வ சாதாரணமாக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார்.

இதைப்பார்த்த அஅதிர்ந்த க்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரிடம் விசாரித்த போது, ” என்னுடைய மகள் காதலித்தது எனக்கு பிடிக்கவில்லை. எனவே அவர் தலையை துண்டித்து கொலை செய்தேன். மேலும் அவருடைய உடல் அறையில் கிடக்கிறது” என்று சர்வசாதாரணமாக கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அவருடைய மகளின் சடலத்தை கைப்பற்றியுள்ளனர். மேலும் சர்வேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |