Categories
தேசிய செய்திகள்

சித்த மருத்துவத்திற்கு காப்பீடு உண்டா…? உயர் நீதிமன்றம் கூறிய கருத்து..!!

சித்த மருத்துவத்திற்கு காப்பீடு வழங்குவது என்பது அரசு கொள்கை ரீதியாக எடுக்க வேண்டிய முடிவு என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

மதுரையை சேர்ந்த கோகிலம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். தமிழ்நாட்டில் 12 சித்தா கல்லூரிகளுடன் கூடிய மருத்துவமனைகள் 20 தனியார் மருத்துவமனைகளில் செயல்பட்டு வருகிறது. சித்தா மூலம் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு பலர் குணமடைந்துள்ளனர். குறிப்பாக கபசுர குடிநீர் பொடியை இந்திய மருத்துவ ஆணையம் அங்கீகரித்துள்ளது.

இந்நிலையில் 2019ஆம் ஆண்டு முதல் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்கள் சித்த வைத்தியம் செய்யும் நோயாளிகளுக்கு காப்பீடு தொகையை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் காப்பீட்டு நிறுவனங்கள் சித்த வைத்தியம் செய்யும் நோயாளிகளுக்கு முறையாக காப்பீடு வழங்குவதில்லை என்று புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

எனவே சித்த மருத்துவத்தில் அனைத்து விதமான சிகிச்சைகளுக்கும் காப்பீடு வழங்க வேண்டும் என்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் சித்த மருத்துவத்திற்கு காப்பீடு வழங்குவது என்பது அரசு கொள்கை ரீதியாக எடுக்க வேண்டிய முடிவு என்றும், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Categories

Tech |