தமிழகத்தில் மீண்டும் கடும் கட்டுப்பாடு போடப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி மக்களை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது. இதையடுத்து கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட்டது. இதனால் ஊரடங்கு காலத்தில் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்தனர். இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து பிரிட்டனில் இருந்து உருமாறிய கொரோனா வைரஸ், கொரோனாவின் இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேலும் சுகாதார துறையும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இனி தமிழகத்தில் பரவாமல் இருப்பதற்காக கடும் கட்டுப்பாடுகள் போடப்பட வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனாவின் எண்ணிக்கை தமிழகத்தில் தற்போது குறைந்தாலும் குடும்பம் குடும்பமாக பரவுகிறது. தற்போது தேர்தல் காலம் என்பதால் மக்கள் கட்டாயம் முகக்கவசம், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். அதற்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகள் சில இடங்களில் அதிகப்படுத்தும் என்று கூறியுள்ளார்.