உடலில் உள்ள பல நோய்களுக்கு அருமருந்தாக அமையும் வாழைப்பழத் தோலின் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
நாம் பொதுவாக வாழைப் பழத்தை சாப்பிடும் போது பழத்தை சாப்பிட்டு விட்டு தொலைதூரம் தூக்கிப் போடுவோம். ஆனால் அதிலிருக்கும் நன்மையைப் பற்றி பலருக்கும் தெரியாது. வாழைப்பழத்தை விட அதன் தோலில் உள்ள நன்மைகள் ஏராளம். வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. அதில் விட்டமின் பி 6, விட்டமின் பி 12, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. வாழைப்பழத் தோல் கருமையடையும் போது பழத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.
வாழைப் பழத்தோலில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் அவை உடல் எடையை குறைக்க உதவும். வாழைப்பழத்தில் உள்ள வேதிப்பொருள் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த பலனை தருகிறது. பச்சை வாழைப் பழத் தோல் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களை அதிகரிக்கிறது. வாழைப்பழத் தோலை தினமும் பற்களை தேய்த்து வர மஞ்சள் கறை நீங்கும். உடலின் மறு இருக்கும் இடத்தில் இரவு நேரத்தில் வாழைப்பழத் தோலை கொண்டு நன்றாக தேய்க்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் மருக்கள் நீங்கும். அதுமட்டுமன்றி புதிதாக மருக்கள் ஏற்படாமலும் இருக்கும். இது தோல் சுருக்கத்தை நீக்க உதவுகிறது. உடல் வலி இருக்கும் இடத்தில் வாழைப்பழத் தோலை தடவினால், 30 நிமிடத்தில் வலி போய்விடும். சொரி சிரங்கு குணமாக இது பயன்படுகிறது. கொசுக்கடி ஏற்பட்ட இடத்தில் வாழைப்பழத் தோலை கொண்டு மசாஜ் செய்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
மேலும் அரிப்பும் வலியும் உடனடியாக நீங்கும். வாழைப்பழத் தோல் கண்களை புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. அதற்கு அதை கண்களில் தடவும் முன்பு சூரிய ஒளியில் சிறிது நேரம் வைக்க வேண்டும். இது கண்ணில் புரை ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இவ்வாறு பல மருத்துவ குணங்கள் கொண்ட வாழைப்பழத் தோலை இனி யாரும் தூக்கி பேச வேண்டாம்.