Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக வரவே கூடாது…! ”234 தொகுதியில் கட்சி இருக்கு”…. எங்களையும் சேர்த்துக்கோங்க.!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத், அதிமுகவினுடைய தலைமைக்கு இந்து மக்கள் கட்சியின் சார்பிலேயே கூட்டணியில் இடம்பெற விருப்பம் தெரிவித்தும், 5 தொகுதிகள் வரை எங்களுக்கு ஒதுக்கி தர வேண்டுமென நாங்கள் எங்களுடைய கூட்டணி தொடர்பான கோரிக்கையை முன் வைத்து இருக்கின்றோம். 234 தொகுதிகளிலும் இந்து மக்கள் கட்சிக்கு கிளை இருக்கிறது. தமிழகத்தில் ஹிந்து இயக்கங்களுக்கும் அங்கீகாரம் வேண்டும்.

நாங்கள் திமுக என்ற தீய சக்தி வந்து விடக்கூடாது என்பதிலே தெளிவாக இருக்கிறோம். எனவே எங்களுக்கான அரசியல் அங்கீகாரம்  இல்லை என்று சொன்னால் நான் தொடர்ந்து இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருக்கிறோம். அதிமுக தலைமையோடு பேச்சுவார்த்தை நடத்த….. இல்லை பிஜேபி தலைமையோடும் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அதற்கான கடிதங்களை நாங்கள் கொடுத்து இருக்கிறோம். அப்படியான வாய்ப்புகள் எங்களுக்கு அமையவில்லை என்று சொன்னால் நிச்சயமாக தமிழகத்திலும் 234 தொகுதிகளிலும் இந்து ஓட்டுகளை அணிதிரட்டி நாங்கள் எங்களுடைய இந்துக்களான குரலை….  இந்துக்களுக்கான தேவைகளை நாங்கள் முன்னெடுத்துச் செல்வோம் என அர்ஜுன் சம்பத் கூறினார்.

Categories

Tech |