நியூஸிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
நியூசிலாந்திலுள்ள ஆக்லாந்து என்னும் நகரிலிருந்து சுமார் 256 மையில்கள் தொலைவில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.25 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகின்றது. கடலுக்கடியில் சுமார் 94 கிலோமீட்டர் ஆழத்திலிருந்து உருவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 அலகாக பதிவாகியுள்ளது. இதனால் குடியிருப்புகள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் கடுமையாக நடுங்கின.
இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் வெளியேறும்படி பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் நியூசிலாந்து கடற்கரை பகுதிகள் முழுவதும் கண்காணிப்பு வட்டத்திற்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த பகுதியை சுற்றி சுனாமி அலைகள் எழும்புவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அரசின் மறு அறிவிப்பு வரும் வரை தங்களின் குடியிருப்பு பகுதிக்கு வரவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.