Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி…!ஹோட்டலில் மனித இறைச்சி…. உணவாக சமைத்த பெண் கைது…!!

நைஜீரியாவில் ஹோட்டலில் இறைச்சிக்காக மனித உடல்களை பயன்படுத்திய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அப்பகுதியில் உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் அந்த உணவகத்தில் மனித இறைச்சியை சமைத்து விற்ப்பதாக காவல்நிலையத்துக்கு தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த உணவகத்தில் திடீரென சோதனை நடத்தியுள்ளனர். இந்த சோதனையின்போது இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்ட சடலத்தையும், சமைக்க தயாராக இருந்த இறைச்சியையும் காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து அந்த பெண்ணை காவல்துறையினர் கைது செய்து இறைச்சிக்காக நபர் கொல்லப்பட்டாரா?, அல்லது இறந்தவர்களின் சடலத்தை இறைச்சிக்காக பயன்படுத்துகிறார்களா? என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Categories

Tech |