Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மகன் வீட்டிற்கு சென்ற தாய்… ஓட்டை பிரித்த மர்மநபர்கள்… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

வீட்டின் ஓட்டை பிரித்து நகை பணம் உள்ளிட்டவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குணபதிமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் அஞ்சம்மாள். இவருடைய கணவர் ஏற்கனவே இறந்து விட்டதால் அஞ்சம்மாள் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.  சம்பவம் நடந்த அன்று அஞ்சம்மாள் அருகில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார். பின்பு மறுநாள் காலை அஞ்சம்மாள் தனது வீட்டிற்கு வந்து பார்த்த போது கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்பு உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருப்பதை கண்டுள்ளார்.

அதன்பின் பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 7 பவுன் நகை மற்றும் 50 ஆயிரம் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அஞ்சம்மாள் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை நடத்தியுள்ளனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ஓட்டை பிரித்து உள்ளே இறங்கி திருடிச்சென்ற மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |