Categories
சினிமா தமிழ் சினிமா

“லிஃப்ட்” படத்தின் மோஷன் போஸ்டர்…. வெளியிட்ட 6 முன்னணி இயக்குனர்கள்…!!

நடிகர் கவின் நடித்துள்ள “லிஃப்ட்” படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒலிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். அதன்பிறகு இவர் பிக் பாஸ் சீசன் 3 இல் பங்கேற்ற இவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் உருவாகின. இந்நிலையில் இவர் தற்போது வினித் இயக்கத்தில் உருவாகியுள்ள “லிஃப்ட்” என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதில் கவினுக்க ஜோடியாக அம்ரிதா நடித்துள்ளார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போட்டோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இன்று காலை 5மணிக்கு மோஷன் போஸ்டர் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப் குமார், அஜய் ஞானமுத்து, வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன், ரவிக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

Categories

Tech |