Categories
தேசிய செய்திகள்

“இம்மாத இறுதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்”…. பள்ளிக்கல்வித்துறைக்கு அதிரடி உத்தரவு..!!

பராமரிப்பு பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் பராமரிப்பு செலவு ஆண்டுதோறும் ஒரு பள்ளிக்கு ஒரு லட்சம் வரை ஒதுக்கப்படுகிறது. இது தவிர ஆய்வகம் அமைத்தல், கூடுதல் கட்டமைப்பு போன்ற பணிகளுக்கு அவ்வப்போது நிதி ஒதுக்கப்படுகிறது .இப்பணிகளை மார்ச் மாதத்திற்குள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

அப்படி செய்தால் தான் அடுத்த பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கப்படும்.  நடப்பாண்டில் ஜனவரி 10ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதேசமயம் முன்கூட்டியே நிதியை ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்த பட்ட நிலையில் அனைத்து பணிகளும் இம்மாத இறுதிக்குள் முடித்து இருக்க வேண்டும். அதற்கான அறிக்கையை சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |