தென்காசி மாவட்டதில் உள்ள சுரண்டை பகுதியில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர் .
தமிழக சட்டமன்ற தேர்தலானது அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. கட்சியினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்களை கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதிக்கு அருகேயுள்ள ,சாம்பவர் வடகரை பகுதியில் பறக்கும் படை அதிகாரியான சிக்கந்தர் பீவி தலைமையில் அமைந்த குழுவில் சப் -இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் கான்ஸ்டபிள் தட்சிணாமூர்த்தி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.