Categories
உலக செய்திகள் கொரோனா

ஒரே நாளில் 369 பேருக்கு கொரோனா… முக கவசம் எல்லாரும் போடுங்க.. ஓமன் அரசு உத்தரவு.. !!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால்  மக்கள்  முக கவசம் அணியாமல் வெளியே செல்ல வேண்டாம் என ஓமன் நாட்டு சுகாதார  துறை  தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு ஆண்டு காலமாக கொரோனாவால் உலக மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளான நிலையில் இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு நாடும் கொரோனா பரிசோதனையை  தீவிரப்படுத்தி சிகிச்சை  மேற்கொண்டுவருகிறது.

ஓமனில் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் 369 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 896 ஆக உயர்ந்துள்ளது. ஓமனில் மேற்கொண்ட பரிசோதனையில் நேற்று மட்டும் 353 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனால்  குணமடைந்தவர்கள்  மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 491 ஆக உள்ளது. தற்போது  தொற்றில்  இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 93.4 சதவீதம் ஆகும்.இதில் மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 1583ஆக உயர்ந்துள்ளது.

Categories

Tech |