தென்காசியை சேர்த்த மாணவன் தேசிய அளவில் நடைபெறும் போட்டிக்கு தகுதி பெற்று சாதனை படைத்துள்ளான் .
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்திய இளைஞர் விளையாட்டுக்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு இளைஞர் ஒலிம்பியன் சங்கத்தின் தலைமையில் நடைபெற்ற வில்வித்தை போட்டியானது, 12 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கு நடத்தப்பட்டது. இதில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்த்த மாணவன் வேல்முருகன் வில்வித்தை போட்டியில் கலந்துகொண்டு, மாநில அளவில் 2 வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் இவர் தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
மாணவனுக்கு ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டாக கருணாநிதி மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநிலத் தலைவரான டி .எஸ் .ஆர் சபாஷ் இருவரும் இணைந்து வெற்றிக் கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். வெற்றி பெற்ற மாணவரை கல்வி ஆக்ஸ்போர்டு சட்ட ஆலோசகரான திருமலை மற்றும் இப்பள்ளியின் முதல்வர் அன்பரசி திருமலை ஆகியோர் மாணவனுக்கு பாராட்டை தெரிவித்தனர் .பெற்றோர்கள் ,ஆசியர்கள் மாணவனுக்கு வாழ்த்து கூறினர் .