உருளைக்கிழங்கு ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள்;
உருளைக்கிழங்கு – 6
மிளகாய்த்தூள் – கரத்திற்கேற்ப
உப்பு – 250 கிராம்
கடுகு – 100 கிராம்
வெந்தயம் – 100 கிராம்
வெள்ளைப் பூண்டு – 14 பற்கள்
பெருங்காயம் – சிறிதளவு
கரம் மசாலா – 5 கிராம்
புளி – சிறிய எலுமிச்சை பழ அளவு
நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை:
முதல்ல தண்ணீர்ல உருளைக்கிழங்கை நல்லா கழுவியதும், ஈரம் பதம் இல்லாமல் நல்லா துடைச்சதும், தோலை நீக்காமல் அப்படியே சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கிகணும். பிறகு நறுக்கி வச்ச உருளைக்கிழங்காய் ஒரு பாத்திரத்துல போட்டு, உப்பு போட்டு, மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றினதும், 10 நிமிடம் நல்லா உற வச்சிரனும்.
பின்னர் அடுப்புல கடாயை வச்சி சூடானதும், எண்ணெய் ஊற்றாமல், கடுகு,வெந்தயம், சீரகத்தை போட்டு நல்லா பொரியும் அளவுக்கு கிளறி விட்டு வாசனை வந்ததும் இறக்கி ஆற வச்சி மிக்சிஜாரில போட்டு நல்லா மையாக அரைச்சி எடுத்துக்கணும்.
பிறகு அடுப்புல அதே கடாயை வச்சி எண்ணெய் ஊற்றி சூடேறியதும், உற வச்ச உருளைக்கிழங்கிலுள்ள தண்ணீர நல்லா வடிகட்டினதும், லேசாக துணியால துடைச்சபிறகு, சூடேறிய எண்ணெயில போட்டு நாள்ல சிவக்க வறுத்து சின்ன பாத்திரத்தில எடுத்துக்கிடனும்.
மேலும் வேக வச்ச உருளைக்கிழங்குடன், அரைச்சி வச்ச வெந்தய கலவையை போட்டு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், கூடுதலாக நல்லெண்ணெய் லேசாக ஊற்றி நல்லா கலந்துக்கிடனும். பின்னர் சின்ன பாத்திரத்துல புளியை போட்டு தேர்வைக்கேற்ப தண்ணீர் ஊற்றி நல்லா கரைச்சிக்கணும்.
மேலும் அடுப்புல கடாயை வச்சி, கூடுதலாக நல்லெண்ணெய் ஊற்றி நல்லா கொதித்ததும், கடுகு சீரகம்,பூண்டு காய்ந்த மிளகாயை கிள்ளி போட்டு,பெருங்காயத்தூள் தூவி நல்லா கிளறிவிட்டபிறகு, கரைச்சி வச்ச புளியை ஊற்றினதும் லேசாக பிரட்டி விட்டபிறகு, கலந்து வச்ச உருளைகிழங்கு கலவையை போட்டு நல்லா கிளறிவிட்ட பிறகு இறக்கி வச்சி, சூடான சாதத்துடன் பரிமாறினால் ருசியான உருளைக்கிழங்கு ஊறுகாய் ரெடி.