ஆந்திரா மாநிலத்தில் மாம்பழ தோட்டத்தில் வைத்து கணவரும், தாயும் சேர்ந்து பெண்ணை எரித்து கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் சத்தியநாராயணா – ஆதிலட்சுமி. இவர்களுக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் ஆதிலட்சுமி இன்னொரு நபருடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து சம்பவத்தன்று ஆதிலெட்சுமியின் கணவரும், அவரது தாயாரும் வேறு நபருடன் பழகுவதை நிறுத்துமாறு அவரை கண்டித்துள்ளனர். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அந்த வாக்குவாதத்தில் அவர்கள் இருவரும் ஆதிலட்சுமியின் தலையில் சுத்தியால் அடித்து கொலைசெய்துவிட்டு அதன்பின் அந்த சடலத்தை கிராமத்திற்கு வெளியே உள்ள ஒரு மாம்பழ தோட்டத்திற்கு எடுத்து சென்று பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். மறுநாள் காலை அப்பகுதியில் உள்ள மக்கள் பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இத்தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் சத்யநாராயணாவும்,அவரது தாயாரும் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர். அவர்கள் இருவரையும் காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.