Categories
சினிமா தமிழ் சினிமா

செல்வராகவனுக்கு பிறந்தநாள் பரிசு… இரண்டாம் போஸ்டரை வெளியிட்ட படக்குழு…!!

இயக்குனர் செல்வராகவன் நடிக்கும் “சாணிக் காகிதம்” படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ்சினிமாவில் வித்தியாசமான படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இதுவரை திரைக்குப் பின்னால் தான் இருந்து பணியாற்றியுள்ளார்.ஆனால் தற்போது “சாணிக் காகிதம்” என்ற படத்தின் மூலம் நடிகராக களம் இறங்கியுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

இந்தப் படத்தினுடைய போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதன்மூலம் இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் செல்வராகவனுக்கு பரிசளிக்கும் வகையில் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

Selvaraghavan: செல்வராகவன் பிறந்தநாள்: சாணிக்காயிதம் படத்தின் மிரட்டலான போஸ்டர் ரிலீஸ்

இந்த புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டு, “செல்வராகவன் ஒரு மிகச்சிறந்த இயக்குனர் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.மேலும் நான் இப்போது ஒரு மிகச்சிறந்த நடிகருடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து பல்வேறு திரை பிரபலங்களும், ரசிகர்களும் இயக்குனர் செல்வராகவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளதால் “சாணிக் காகிதம்” படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Categories

Tech |