Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தேர்தல் பாதுகாப்பு விழிப்புணர்வு… திண்டுக்கல்லில் துணை ராணுவப்படை கொடி அணிவகுப்பு..!!

திண்டுக்கல்லில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இந்த தேர்தல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திண்டுக்கல்லில் ராணுவ வீரர்கள், காவல் துறையினருடன் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர். இந்த அணிவகுப்பிற்க்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார்.

இந்த அணிவகுப்பில் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் மற்றும் துணை இராணுவ வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கொடி அணிவகுப்பானது பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி அசோக்நகர், மீனாட்சிபுரம், தர்பார், கடைவீதி வழியாக மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்து முடிவடைந்துள்ளது. இந்த அணிவகுப்பு தேர்தல் பாதுகாப்பை மக்களுக்கு ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டது.

Categories

Tech |