Categories
உலக செய்திகள்

அடடே..! சென்னை பெண்ணுக்கு பதவி…. அமெரிக்காவை கலக்கும் இந்திய பெண் …!!

அமெரிக்காவில் வணிகம் மற்றும் நிர்வாக சட்டம் தொடர்பான  துணைக் குழுவின் துணைத் தலைவராக தமிழ் பெண் ஒருவர் எம்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஜனநாயக கட்சியை சேர்ந்த 55 வயதான பிரமிளா ஜெயபால் என்பவர் சென்னையை சேர்ந்த தமிழ் பெண் ஆவார். இவர் கடந்த 2017ம் ஆண்டு முதல் அமெரிக்க எம்.பி.யாக உள்ளார். மேலும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வணிகம் மற்றும் நிர்வாக சட்டம் தொடர்பான துணைக் குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரமிளா ஜெயபால் இது தனக்கு கிடைத்த கவுரவம் என்றும் கூறியுள்ளார் .

Categories

Tech |