மைக்ரோசாஃப்ட் ப்ரோக்ராமில் உள்ள குறைகளை கண்டுபிடித்த நபர் ஒருவருக்கு ரூ.36 லட்சத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் பரிசாக கொடுத்துள்ளது.
சென்னையில் வசிப்பவர் லக்ஷ்மணன் முத்தையா. இவர் மைக்ரோசாஃப்ட் அக்கவுண்டை யார் வேண்டுமானாலும் ஹேக் செய்யலாம் என்ற வகையில் அதனுடைய புரோகிராமில் பிழை இருப்பதை கண்டுபிடித்து அந்த நிறுவனத்திற்கு மெயில் அனுப்பியுள்ளார். இதையடுத்து மைக்ரோசாப்ட் நிறுவனம் அந்த இளைஞரை பாராட்டி, மைக்ரோசாஃப்ட் ப்ரோக்ராமில் உள்ள குறைகளை கண்டுபிடித்ததற்காக அவருக்கு ரூ.36 லட்சத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் பரிசாக கொடுத்துள்ளது. இவர் ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் குறையைக் கண்டுபிடித்து கூறி பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.