Categories
தேசிய செய்திகள்

வலையில் சிக்கிய சிங்கத்தை…. தில்லாக பாய்ந்து பிடித்த வனத்துறை ஊழியர்…. வைரல் வீடியோ…!!

குஜராத் மாநிலம் ரஜுலா என்ற பகுதியில் வனப்பகுதியிலிருந்து குடியிருப்பு பகுதிக்குள் சிங்கங்கள் நுழைந்து அட்டகாசம் செய்து கொண்டிருந்துள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிக்குள் சிங்கங்கள் நுழைவதை தடுப்பதற்காக குடியிருப்புகளை சுற்றிலும் வலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வலைக்குள் சிங்க குட்டி ஒன்று சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளது.

இதையடுத்து வனத்துறையினர் அந்த சிங்க குட்டியை  மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிங்கக் குட்டியினை  வனத்துறை ஊழியர் ஒருவர் ஓடி சென்று வெறும் கையினால் பிடித்துள்ளார் .பின்பு வலையிலிருந்து சிங்ககுட்டியை மீட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணைத்தில் வைரலாக பரவி வருகின்றது.

Categories

Tech |