2020-இல் புதியதாக அறிமுகமாக இருக்கும் ராயல் என்ஃபீல்டு B.S. 6 தண்டர்பேர்டு
பிரபல பைக் நிறுவனமான ராயல் என்ஃபீல்டு புதிய தலைமுறை தண்டர்பேர்டு என்ற மாடலை சோதனை செய்து அதன் வீ டியோவை வெளியிட்டுள்ளது. இதில் புதிய மோட்டார் சைக்கிளின் புதிய விவரங்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது.
புதிய தலைமுறை தண்டர்பேர்டு மாடலில் ஃபியூயல் இன்ஜெக்டெட் B.S 6 புகை விதிகளுக்கு ஏற்ற என்ஜின் வழங்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு 2002_ஆம் 350 CC கொண்ட தண்டர்பேர்டை அறிமுகம் செய்ததை தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு மடல்களை வெளியிட்ட ராயல் என்ஃபீல்டு 2012 ஆம் ஆண்டு பல்வேறு மாற்றங்களுடன் கூடிய 350 மற்றும் 500 வேரியண்ட்கள் அறிமுகபடுத்தியது.
இந்நிலையில் ராயல் என்ஃபீல்டு 2018 ஆம் ஆண்டு புதிய தண்டர்பேர்டு X மாடலை அறிமுக படுத்தியது. தண்டர்பேர்டு மாடலில் பழைய ஹார்டுவேர் மற்றும் சைக்கிள் பாகங்கள் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் , தற்போது புதிய தலைமுறை மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்போது அதன் விடியோவை வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட வீடியோவில் ராயல் என்ஃபீல்டு புதிய மாடலில் டூயல்-கிரேடில் டிசைன்கள், மற்றும் சிங்கிள் டவுன்டியூப் டிசைன்கள் இருப்பதாக காணப்படுகிறது .வெளியாகியிருக்கும் வீடியோவின் படி புதிய மாடலில் டூயல்-கிரேடில் டிசைன், சிங்கிள் டவுன்டியூப் டிசைன் பயன்படுத்தப்படுகிறது.
புதிய வடிவமைப்பு செய்யப்பட்ட என்ஜின் கேஸ்களும் உள்ளது.அதிர்வுகளை குறைக்க புதிய மாடலில்என்ஜின் மவுண்ட்களில் ரப்பர் டேம்பிங் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் ஹெட்லேம்ப் மற்றும் ஹேண்டில்பார் உள்ளிட்டவையும் முந்தைய மாடல்களை விட கீழே பொருத்தப்பட்டுள்ளது. இதன் பெட்ரோல் டேன்க் தற்போதைய மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது.இந்த புதிய பைக் மாடலில் ஹெட்லேம்ப் மற்றும் ஹேண்டில்பார் உள்ளிட்டவை கீழே பொருத்தப்பட்டும்,பெட்ரோல் டேன்க் தற்போதைய மாடலில் உள்ளதை போலவும் காணப்படுகிறது.