ராஜஸ்தானில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 60 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதிற்கு மேல் மற்றும் 45 வயதிற்கு மேல் உள்ள நோயாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தானில் கோட்டா மாவட்டத்தில் உள்ள கார் மூடி கிராமத்தில் வசிக்கும் பகதூர் சிங் ராஜ்புட் 60 வயதுடைய முதியவர் நேற்று முன்தினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் .
திடீரென நேற்று காலையில் அவருக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. இதனால் மயங்கி விழுந்த அவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர் பகதூர் சிங் இறந்துவிட்டதாக தெரிவித்தார் .முதியவர் என்ன காரணத்தினால் இறந்தார் என்பதை தெரிந்து கொள்வதற்காக அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு அம்முதியவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகவும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.