பொதுவாக குழந்தைகள் இருக்கும் வீட்டில் எப்போதும் கலகலப்பாக இருக்கும். குழந்தைகள் செய்யும் சேட்டைகளும், குறும்புத்தனமும் ஒரு சில நேரம் கோபத்தை வர வைத்தாலும் ஒரு சில நேரம் மகிழ்ச்சியை உண்டாக்கும். எவ்வளவு தாங்கமுடியாத கவலைகள் இருந்தாலும் குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்தை பார்த்தால் அவ்வளவும் பறந்து விடும். இந்நிலையில் இணையத்தில் குழந்தையின் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் குழந்தை ஒன்று தனது முன்பு சாப்பாட்டு தட்டை வைத்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது.
இதையடுத்து தாங்கமுடியாத தூக்கம் வருகிறது. அப்போது அந்த குழந்தை சாப்பிடவும் முடியாமல், தூங்கவும் முடியாமல் தவித்து படாதபாடு படுகிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி உள்ளது. இந்த வீடியோ பார்ப்பவர்களை பரிதாபம் கலந்த சிரிப்பை வர வைக்கிறது.
இப்படி சொருகுதே தட்ட வச்சிட்டு போய் தூங்கு டா 😂😂😍😍😘 pic.twitter.com/frjpMrqXDY
— சரவணன் (@saravananucfc) February 26, 2021