Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டார் குரலில் பேசி அசத்திய சிவகார்த்திகேயன்… வெளியான செம மாஸ் வீடியோ…!!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் ரஜினிகாந்த் குரலில்  பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

தமிழ் திரையுலகில்  நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் ,டாக்டர் ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இதை தொடர்ந்து இவர் அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் டான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் . இந்தப்படத்தில் பிரியங்கா மோகன் ,எஸ் ஜே சூர்யா, சூரி ,சிவாங்கி ,சமுத்திரக்கனி, முனீஸ்காந்த், பாலசரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை லைக்கா புரொடக்சன் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்புக்கு இடையே கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குரலில் மிமிக்ரி செய்து பேசிய வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |