Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் அமைதியாக வாழ…” இந்த நகரங்கள் தான் தகுதியானவை”… வெளியான பட்டியல்…!!

மக்கள் வாழ சிறந்த நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அதில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் இடம் கிடைத்துள்ளது.

கிராமங்களிலிருந்து படித்து முடித்த இளைஞர்கள் பலர் வேலைக்காக பெரு நகரங்களுக்கு இடம் மாறுகின்றனர். இதனால் பெரு நகரங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள 10 நகரங்களின் பட்டியல்களை மத்திய அரசு வெளியிட்டது. அந்த பட்டியலில் கோவையும், சென்னையும் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் சென்னை 4வது இடமும், கோயம்புத்தூர் 7வது இடமும் பிடித்ததுள்ளது.

Easy of living index எனப்படும் மக்கள் வாழ சிறந்த நகரங்களுக்கான 10 நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது. அதில் முதலிடத்தில் பெங்களூரும், இரண்டாவது இடத்தில் புனேவும், மூன்றாவது இடத்தில் அஹமத்பாத் மற்றும் 4வது இடத்தில் சென்னையும், ஐந்தாவது இடத்தில் சூரத்தும், ஆறாவது இடத்தில் நவிமும்பை நகரமும், ஏழாவது இடத்தில் கோவையும், எட்டாவது ஒன்பதாவது இந்தூர் நகரமும், 10வது இடத்தில் கிரேட்டர் மும்பையும் இடம்பெற்றுள்ளது.

Categories

Tech |