நியூசிலாந்து அரசு ஆழ்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நில நடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதால் அப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.
பசிபிக் நெருப்பு வளையம் எனப்படும் பூகம்ப அபாய பகுதியில் நியூசிலாந்து அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகின்றன. இந்நிலையில் தற்போதுநியூசிலாந்தின் கிழக்கு பகுதியில் சுமார் 256 மைல் தொலைவில் கடலுக்கு அடியில் 94 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகியுள்ளது.
மேலும் ஆழ்கடலில் உருவான இந்த நிலநடுக்கத்தால் சுமார் 300கிலோமீட்டர் தொலைவில் சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பசிபிக் சுனாமி மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. இதனால் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்கள் சீக்கிரம் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நியூஸிலாந்து அரசு அறிவித்துள்ளது. இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.