உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்பி ஒருவர் நீங்கள் குழந்தை பெற்று கொள்கிறீர்கள் என்றால் அவர்களின் கல்வி செலவை நாங்கள் ஏன் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த பாஜக எம்பி ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது தொகுதியில் பொது உரையாடலில் ஈடுபட்டு இருந்தார் .அப்போது பெண்கள் குழு ஓன்று இவரை அணுகி தனியார் பள்ளிகளில் கட்டணம் தள்ளுபடி செய்வதற்கான கருத்துகளைக் கூறியுள்ளனர். இதை பற்றி அவர் கூறிய போது “நீங்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள். நாங்கள் பணம் தருகிறோம், நீங்கள் எங்களிடம் பணம் மற்றும் பரிந்துரைக்க வருகிறீர்கள். நாங்கள் ஏன் அவர்களின் கல்விக்கு பணம் வழங்க வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. பல கட்சிகள் இந்த வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமாஜ்வாதி கட்சி செய்தி தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி எம்எல்ஏவின் கருதி துரதிஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ளார். பாஜக எம்எல்ஏவின் இந்த கருத்து கண்டிக்கத்தக்கது என்றும், பாஜகவும் அதன் தலைவர்களும் யாருக்கும் உதவுவதில்லை, பெண்களை அவமானப் படுத்துகிறார்கள் என்று அவர் சாடியுள்ளார்.