Categories
தேசிய செய்திகள்

வாடிக்கையாளர்களை கவர்வதற்க்காக…. ரூ. 4 லட்சத்தில் தங்கரேசர்…. அசத்திய சலூன் கடைக்காரர்…!!

புனேவில் உள்ள சலூன் கடையில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான தங்கரேசரில் முடி சவரம் செய்யும் சம்பவம் வைரலாகி வருகின்றது.

புனேவைச் சேர்ந்தவர் அபினாஷ். இவர் அதேபகுதியில் சலூன் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அவரது கடைக்கு பழைய கஸ்டமர்கள் கூட  வருவதில்லை என்பதால் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பல நாள் யோசித்து ரூ. 4 லட்சம் மதிப்பிலான 80 கிராம் எடையுள்ள தங்க ரேசரை வாங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “தங்கரேசர் வாங்க கொடுத்த பணம் என்னுடைய பல வருட சேமிப்பின் மொத்த தொகை என்றும், இதை வைத்து வாடிக்கையாளர்களுக்கு முடி சவரம் செய்தாலும் அவர்களிடம் இருந்து கட்டணமாக ரூ. 100 மட்டுமே வாங்குவதாகவும்” தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Categories

Tech |