Categories
தேசிய செய்திகள்

“இது என் மகளின் தலை… என்கிட்ட இருக்கு… உடம்பு வீட்டில இருக்கு”… தந்தை அளித்த பகீர் வாக்குமூலம்…!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் தனது மகளின் தலையை துண்டாக வெட்டி அதனை கையில் எடுத்துக்கொண்டு சாதாரணமாக ரோட்டில் நடந்த தந்தையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் ஹர்தாய் மாவட்டம் பண்டதரா பகுதியை சேர்ந்த சர்வேஷ் குமார் என்பவர் தனது 17 வயது மகளின் தலையை துண்டாக வெட்டி அதனை கையில் வைத்துக்கொண்டு ரோட்டில் எந்தவித பதட்டமும் இன்றி நடந்து வந்துள்ளார். இதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் அனுப்பினார். காவல்துறையினர் அங்கு வந்து அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது சிறிது கூட பயம் இல்லாமல் நான் தான் தன் மகளை கொலை செய்தேன். என் மகளின் காதல் விவகாரம் எனக்கு பிடிக்காத காரணத்தினால் இவ்வாறு செய்ததாகவும், தலை இங்கு இருக்கின்றது. உடல் எனது வீட்டில் இருக்கிறது என்று சாதாரணமாக பதில் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்த காவல் நிலையத்தில் அழைத்து சென்றனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |