Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இப்படி வெயில் அடிச்சா எப்படி தருவாங்க… மிக முக்கிய அணை… குறைய தொடங்கும் நீர்மட்டம்…!!

கோடை காலத்தில் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்ப வாய்ப்பு மிகக் குறைவாக உள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.58 அடியாகும். இந்த ஏரியால் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகருக்கு குடிநீர் வழங்குவதில் வீராணம் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த ஆண்டு பெய்த மழையால் வீராணம் ஏரி நிரம்பி வழிந்தது. அதனால் உபரி நீர் அப்படியே திறந்து விடப்பட்டதால் கரையோரத்தில் உள்ள கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி தீவு போல் காட்சியளித்தது.

தற்போது மழையும் பெய்யவில்லை. அதனால் காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் நாளுக்குநாள் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இந்த அணையில் இன்று நீர்மட்டத்தின் அளவு 40.58 அடியாக குறைந்துள்ளது. இந்த வெயில் தொடர்ந்து இப்படியே அடித்து வந்தால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

Categories

Tech |