Categories
உலக செய்திகள்

கீழே விழுந்து சிதறிய ஹெலிகாப்டர்…! ராணுவ தளபதி உயிரிழப்பு…. துருக்கியில் பெரும் சோகம்…!!

துருக்கியில் ராணுவ ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கியின் கிழக்கு மாகாணமான பிட்லிஸ்ல்  ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று தரையில் மோதி பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்த 11 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்தில் துருக்கி இராணுவத்தின் 8வது கார்ட்ப்ஸ்சின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஒஸ்மான் ஏர்பாஸ் என்பவரும் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதைத்தொடர்ந்து  துருக்கி ஜனாதிபதி எர்டோகன் இறந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு  இரங்கல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |