Categories
தேசிய செய்திகள்

கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்த…. இங்க வந்து கொடுக்குறியா…? கையும் களவுமாக பிடித்த மனைவி…!!

தெலுங்கானாவில் தகாத உறவில் ஈடுபட்டுள்ள கணவரை கையும் களவுமாக பிடித்த மனைவி தர்ம அடி கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானாவை சேர்ந்தவர் ராஜீபாய். இவர் கேபிள் ஆபரேட்டராக வேலை செய்து வருகின்றார். இவருக்கு 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜீபாய்க்கும் அதே பகுதியில் உள்ள திருமணமாகாத பெண் ஒருவருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக அவரின் மனைவிக்கு ஒரு செய்தி வந்துள்ளது. இச்செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரின் மனைவி  தனது கணவரை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்பதற்காக அவரின் உறவினர்களை அழைத்துக் கொண்டு அந்தப் பெண் இருக்கும் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார்.

இந்நிலையில் ராஜீபாய் வந்து கதவை திறக்கவும்  உறைந்துபோன மனைவி “நான் கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்து குடும்பத்தை காப்பாத்துனா  அந்த பணத்தை எல்லாம் எடுத்துதுவந்து  இங்கே கொடுக்கிறாயா?,  தோளுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளை வைத்துக்கொண்டு நீ செய்கிற காரியமா இது என்று கூறி அவரையும், அந்த பெண்ணையும் கையில் கிடைத்த பொருளை வைத்து வெளுத்து வாங்கியுள்ளார். மேலும் அவர்கள் உறவினர்களும் அவரை சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளனர். அதன்பின் அவர்கள் இருவரையும் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |