சங்ககிரியில் விவசாயி அடித்து கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வருகின்றன .
சேலம் மாவட்டத்தில்,சங்ககிரிக்கு அருகிலுள்ள அன்னதானப்பட்டி கிராமத்தில் உப்பு பாளைய பகுதியை சேர்ந்தவரான 45 வயதுடைய சேகர் (எ)ராமசாமி. விவசாயியான இவர்,தன் தோட்டத்தில் தென்னை மரம் வளர்ப்பு பணியில் ஈடுபட்டுவந்தார். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடைபெற்றது. மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவகாரத்து பெற்று,தன் தந்தை தாயுடன் வாழ்ந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் மொபட்டை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார்.
இவரின் தந்தை நாச்சிமுத்து இரவு 9 மணிக்கு தென்னை மரத்திற்கு தண்ணீர் விட தோட்டத்திற்கு சென்றுள்ளார். அங்கு மகன் சேகர் பலத்த காயங்களுடன் அடிபட்டு, இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து ,சங்ககிரி போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சேகரின் உடலை எடுத்துக்கொண்டு ,சேலம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். சேகர் இறந்த இடத்தில் 2 கம்பிகள் மற்றும் சைக்கிள் டயருக்கு காற்றடிக்க பயன்படும் பம்பு இருந்தன. இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்தது யார் ? என்று விசாரித்து வருகின்றனர்.