காவலர் ஒருவர் என் சாவுக்கு எனது மனைவியும் என் மாமியாரும் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்னோட சாவுக்கு என் மனைவி குறிஞ்சி மலரும், அடங்காத திமிர் பிடித்த எனது மாமியார் மீனாவும் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்து விட்டு காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் என்னுடைய கடைசி ஆசை, “என் போன்ற அடிமட்ட காவலர்களுக்கு கேரள மாநிலம் போன்று சமூகம் தர வேண்டாம். ஆந்திரா போன்ற சம்பளம் தர வேண்டாம். வாரம் ஒரு முறை விடுமுறை தாருங்கள்”என உருக்கமாக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.