Categories
சினிமா தமிழ் சினிமா

பிடிக்காத படத்தில் நடிக்காதீங்க…. வளரும் நடிகைகளுக்கு தமன்னா அட்வைஸ்…!!

பிரபல நடிகை தமன்னா வளரும் நடிகைகளுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

தமிழ் திரையுலகில் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை தமன்னா.இவர் தற்போது 5 தெலுங்கு படங்களையும் ஒரு இந்தி படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் வளரும் நடிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாமல் போகலாம். அதனால் ரசிகர்கள் திரையில் நம்மை காணாமல் போனால் மறந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் பல நடிகைகள் தங்களுக்கு வரும் வாய்ப்புகள் அனைத்தையும் ஒப்புக் கொள்கின்றனர். அதில் தான் அவர்கள் தவறு செய்கின்றனர்.

அப்படி வரும் அனைத்து படங்களையும் தங்களுக்கு உண்மையிலேயே பிடித்திருந்தால் மட்டுமே ஒப்புக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் அது தங்களது சினிமா வாழ்க்கையை பாதிக்கும். வாய்ப்புகள் கிடைக்காவிட்டால் கூட பரவாயில்லை.ஆனால் பிடிக்காத படத்தை ஒருபோதும் ஒப்புக் கொள்ளாதீர்கள் என்று நடிகை தமன்னா வளரும் நடிகைகளுக்கு அட்வைஸ் அளித்துள்ளார்.

Categories

Tech |