Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பந்தின் மேல் முட்டி போட்டு ஒர்க் அவுட் செய்த சமந்தா… வைரலாகும் வீடியோ…!!!

நடிகை சமந்தா கடினமான ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தாவுக்கு ரசிகர்கள் ஏராளம் . தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் சமந்தா வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடர் விரைவில் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் சமந்தாவின் ஒர்க்அவுட் வீடியோ !  - Tamil Movie Cinema News

சமீபத்தில் சினிமாவில் அறிமுகமாகி பதினோரு ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடிய சமந்தா தனது ரசிகர்கள் மற்றும் சினிமா கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார் . இந்நிலையில் மிகவும் கடினமான ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் ஒரு பந்தின் மேல் முட்டி போட்டு கீழே விழாமல் பேலன்ஸ் செய்வதை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர் .

Categories

Tech |