Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

100% வாக்களிக்க வேண்டும்… மண்பாண்ட தொழிலாளர்கள் விழிப்புணர்வு… மாவட்ட ஆட்சியர் பாராட்டு..!!

மானாமதுரையில் மண்பாண்ட தொழிலாளர்கள் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று மண்பாண்ட பொருள்களை வைத்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதை மாவட்ட ஆட்சியர் பாராட்டியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏற்படுத்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி மேற்பார்வையிட்டார். வாக்காளர் தகவல் மையத்தினனை மானாமதுரையில் தாலுகா அலுவலகத்தில் தொடங்கி வைத்துள்ளார். அதன்பின் வாக்குப்பதிவு எந்திரங்களை இயக்குவது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். அனைவரும் அச்சமின்றி வாக்களிப்போம் என்று பேரூராட்சி முன்பு வைக்கப்பட்டிருந்த வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டாலில் மணி அடித்து உறுதிமொழியினை தொடங்கி வைத்துள்ளார்.

இதையடுத்து மானாமதுரையில் மண்பாண்ட பொருட்களை வைத்து மண்பாண்ட தொழிலாளர்கள் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தியதை மாவட்ட ஆட்சியர் பாராட்டியுள்ளார். அதன்பின் மானாமதுரை பழைய பேருந்து நிலையத்தில் வாக்காளர்களுக்கான நடமாடும் சேவை மையத்தையும் கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இளையான்குடி தாசில்தார் ஆனந்த், மானாமதுரை தாசில்தார் மாணிக்கவாசகம், துணை தாசில்தார் சுரேஷ், மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலர் குமரேசன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |