Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடு கண்டித்து… ஆர்ப்பாட்டம்…!!!

வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை கண்டித்து சிவகிரி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

தென்காசி மாவட்டத்தில் சிவகிரி பகுதியில், சிவகிரி தேவர் மகாசபை சார்பில், நேற்று வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிவகிரி தேவ மகாசபை தலைவரான குருசாமி பாண்டியன் தலைமை ஏற்று நடத்தினார்.

உபததலைவரான விக்னேஷ் ராஜா, செயலாளரான சௌந்தர்ராஜன் மற்றும் பொதுச்செயலாளராக கற்பக சுந்தரம், பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கருப்புக் கொடிகளை ஏந்தி, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்த கோஷங்களை எழுப்பி , ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபோலவே கடையநல்லூர் பகுதியில் சொக்கம்பட்டி சந்தன மாரியம்மன் கோவிலின் முன் முக்குலத்தோர் சமூகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Categories

Tech |