சிவகங்கை முத்துமாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.11 லட்சத்திற்கும் மேல் பிரிந்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலைக்கு உட்பட்டது. இங்கு வருடந்தோறும் பங்குனி, மாசி திருவிழா நடைபெறும். அதற்கு முன்னதாக உண்டியலை திறந்து அதில் உள்ள பணத்தை எண்ணுவது வழக்கமாக வைத்துள்ளனர். இந்த வருடம் மார்ச் மாதம் 9-ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
இதையொட்டி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம் தலைமையில் கோவிலில் உள்ள உண்டியல் திறக்கப்பட்டு எண்ணும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் 11 வெளிநாட்டு கரன்சி நோட்டு, ரூபாய் 11 லட்சத்து 86 ஆயிரத்து 156, 100 கிராம் தங்கம், 705 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியன உண்டியலில் இருந்தன. இதற்கான முன்னேற்பாடுகளை கோவில் கணக்கர் அழகுபாண்டி மற்றும் செயல் அலுவலர் சுமதி ஆகியோர் செய்துள்ளனர்.