Categories
அரசியல் மாநில செய்திகள்

கண்ணீர் விட்டு கதறிய கே.எஸ்.அழகிரி… பெரும் பரபரப்பு…!!!

திமுக உடனான தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ள நிலையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கே.எஸ்.அழகிரி கண்ணீர் விட்டு அழுதார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.

அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக உடனான தொகுதி பங்கீடு இழுபறியில் உள்ளதால், காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கே எஸ்.அழகிரி கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திமுக அளிப்பதாகக் கூறும் தொகுதி எண்ணிக்கை, மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாக இருக்கிறது. திமுக கறாராக உள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகளைப் பெற்று வருகிறோம். இந்த முறை குறைந்த இடம் பெற்றால் அடுத்த முறை பேசுவதற்கு கூட இடம் இருக்காது என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |