மது விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் மது விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் அவர்கள் மயிலாடி மற்றும் அய்யர்மலை பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது செல்லாண்டி என்பவர் தன்னுடைய பெட்டி கடையில் வைத்து மது விற்பனை செய்துள்ளார். அதேபோல் கணேசன் என்பவரும் மது விற்பனையில் ஈடுபட்டுள்ளார். இதனை கண்ட காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 96 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.