Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக-காங்கிரஸ் கூட்டணி… இதுதான் காரணம்?… பெரும் பரபரப்பு…!!!

திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இழுபறிக்கு 4 சீட் பிரச்சினையே காரணமாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.

அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திமுக உடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையும் 31 தொகுதிகளைக் கேட்ட காங்கிரஸ், தற்போது 27 இடங்களுக்கு இறங்கி வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் 27 இடங்களை கேட்கும் நிலையில், 23 இடங்கள், ராஜ்யசபா சீட், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பொதுக் அதிமுக சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் திமுக மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு இழுபறிக்கு 4 சீட் பிரச்சனையே காரணமாக கூறப்படுகிறது.

Categories

Tech |