நபர் ஒருவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ள நிலையில் 3 வதாக 10 ஆம் வகுப்பு மனைவியை கடத்தி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் பணகுடி பக்கத்தில் உள்ள கலந்தபனை புதூர் கிராமத்தில் வசிப்பவர் ஸ்டீபன் (26). கூலித் தொழிலாளியான இவருக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் இவர் பணகுடிக்கு அடிக்கடி வேலை நிமித்தமாக செல்லும்போது அங்கு பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாணவியிடம் நன்கு பழகி வந்துள்ளார். இதையடுத்து ஒரு கட்டத்தில் அந்த மாணவியை அழைத்து கொண்டு தலைமறைவாகியுள்ளார். இதனால் மாணவியின் பெற்றோர்கள் ஸ்டிபன் மீது புகார் அளித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் 10 ஆம் வகுப்பு மாணவி நாகர்கோவிலில் உள்ள ஒரு மாட்டுப் பண்ணையில் ஸ்டிபனுடன் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து அந்த மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் ஸ்டீபன் ஏற்கனவே 2 மனைவிகள் இருந்த நிலையில் 3 வது பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்றுள்ளார். மேலும் அருகிலுள்ள இரண்டு இளம் பெண்களுக்கு காதல் வலை வீசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.