Categories
தேசிய செய்திகள்

மகளிர் தினத்தில்…” பெண் காவலர்களுக்கு விடுமுறை”…. மாநில அரசு அதிரடி..!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள அனைத்து பெண்  காவலர்களுக்கும் மகளிர் தினத்தன்று விடுமுறை என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

ஆந்திர அரசு மார்ச் 8 தேதியன்று பெண்களுக்கு செல்போன்கள் வாங்க 10 சதவீத  தள்ளுபடியை அறிவித்தது . வருகிற மார்ச் 8-ம் தேதி மகளிர் தினத்தையொட்டி ஆந்திர மாநிலம் பெண்கள் பாதுகாப்பு மொபைல் செயலியான“ஆஃப்”பான திஷா செயலியை டவுன்லோட் செய்யக்கூடிய  பெண்கள் வாங்கும் மொபைலுக்கு குறிப்பிட்ட வணிக வளாகங்களில் மட்டும் 10% தள்ளுபடி வழங்குவதாக ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி அனைத்து பெண் காவலர்களுக்கும் அன்றைய தினம் விடுமுறை வழங்கப்படுகிறது. அந்த நாளை கொண்டாடும் வகையில் பல்வேறு நலத்திட்ட நடவடிக்கைகளும் ஆந்திர அரசு அறிவித்துள்ளது .மார்ச் 8-ஆம் தேதியன்று  பெண்களின் பாதுகாப்பு , அதிகாரம் கொடுத்தல்  குறித்த குறும்பட போட்டிகள் நடத்தவும் ,அனைத்து அங்கன்வாடிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இலவசமாக சுகாதார பரிசோதனைகள் மேற் கொள்ளவும், மாநிலம் முழுவதும் மெழுகுவர்த்தி பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |