பிரான்ஸ் அதிபர் பொது முடக்கம் எந்த பகுதிகளில் நீட்டிக்கப்படுகிறது என்பது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கொரோனா தீவிரத்தை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் பல கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று பிரான்ஸ் பிரதமரான Jean Castex அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் பொது முடக்கமானது வார இறுதிகளில் சனிக்கிழமை முதல் Pas-de-calais என்ற பகுதி வரை நீடிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தாக்கம் Hauts-alpes, Aisne Aube போன்ற பகுதிகளில் அதிகம் இருப்பதால் அவற்றை தீவிர கண்காணிப்பில் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சுமார் 23 பகுதிகள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். இந்த பகுதிகளில் இருக்கும் கடைகளில் அத்தியாவசியமில்லாத மற்றும் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படாத 10,000 சதுர அடிக்கும் அதிகமான இடப்பரப்புகள் உள்ள கடைகள் அடைக்கப்படவுள்ளன.
மேலும் பிரான்சில் தற்போது பதவி வரும் கொரோனா வைரஸில் சுமார் 60 சதவீதத்திற்கும் மேலாக பிரிட்டன் வகை கொரோனா தான் பரவுவதாக பிரான்ஸ் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த பதினைந்து தினங்களில் இந்த பிரிட்டன் வகை வைரஸின் தாக்கம் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அரசு மூன்றாம் பொது முடக்கத்தை தவிர்க்க பல முயற்சிகளை நடத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.