Categories
அரசியல் மாநில செய்திகள்

சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சுபவன் நான் இல்லை… டிடிவி தினகரன்…!!!

சலசலப்புகளுக்கெல்லாம் அஞ்சுபவன் நான் இல்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும் என் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.

அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்தான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன் என சசிகலா பரபரப்பு அறிக்கையை வெளியிட்டார். இதனை அடுத்து சசிகலா அரசியலில் இருந்து விலகியதற்கு தினகரன் தான் காரணம் என பலரும் கூறி வருகின்றனர்.

இதுபற்றி அறிந்த தினகரன், சலசலப்புக்கு எல்லாம் அஞ்சுபவன் நான் இல்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாக தெரியும் என்று கூறியுள்ளார். தமிழக மக்களின் ஆதரவுடன் அமமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. மக்கள் எங்களை நிராகரிக்கும் வரை நாங்கள் அரசியலில் இருப்போம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |