Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இவங்க மேல நிறைய வழக்குகள் இருக்கு… குண்டர் சட்டத்தில் கைது… போலீஸ் அதிரடி நடவடிக்கை…!!

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 6 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விக்னேஸ்வரன், லட்சுமணன், ஐயப்பன், ராஜதுரை, வீரமணி, சரத்குமார் ஆகிய 6 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவர்களை உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில் தஞ்சை ஊரக உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ஆனந்த் மேற்குறிப்பிட்ட ஆறு பேரையும் அதிரடியாக குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |