Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வெயில் சுட்டு எரிக்குது… மழை இல்லை… குறைய ஆரம்பித்தது அணையின் நீர்மட்டம்…!!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.

சேலம் மாவட்டத்திலுள்ள கடந்த ஆண்டு பெய்த கன மழையினால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி இருந்தது. ஆனால் தற்போது வெயில் வாட்டி கொண்டிருக்கிறது. அதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாத காரணத்தினாலும் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

அதன்படி நேற்று அணையின் நீர்மட்டம் 102.71 அடியாக இருந்துள்ளது. இந்த நீர்மட்டத்தின் அளவு இன்று காலை 102.60 அடியாக குறைந்துள்ளது. மேலும் வினாடிக்கு 153 அடி கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் வினாடிக்கு 1500 கன அடி தண்ணீர் அணையிலிருந்து திறந்துவிடப்படுகிறது.

Categories

Tech |